27 C
Cañada
Wednesday, July 3, 2024
spot_img

உணவு குழாய் இயக்க பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன பரிசோதனை

பல்வேறு காரணங்களால் எம்மில் சிலருக்கு உணவு பொருட்களை விழுங்குவதில் பாரிய அசௌகரியமும், சிரமமும் உண்டாகிறது.
உணவு விழுங்குவதில் சிக்கல் இருந்தால் அதற்காக வைத்தியரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். அவர் இதன் போது உணவு குழாய் இயக்கம் தொடர்பான பிரத்யேக நவீன பரிசோதனையான உணவுக் குழாய் மனோமெட்ரி எனும் பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பார்.
உடனே எம்மில் சிலர் எண்டோஸ்கோபி மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை மூலம் இதனை அவதானிக்க இயலாதா? எனக் கேட்பர். உணவுக் குழாய் இயக்க பாதிப்பை மேற்கூறிய இரண்டு பரிசோதனைகளாலும் துல்லியமாக அவதானிக்க இயலாது. மேலும் உணவுக் குழாயில் சுருங்கி விரியும் பணியினை மேற்கொள்ளும் தசைகளில் இயக்க பாதிப்பை துல்லியமாக அவதானிக்க உணவு குழாய் மனோமெட்ரி எனும் பரிசோதனை உதவுகிறது.
நீங்கள் வாய் வழியாக மெல்லும் உணவுகளை உணவுக் குழாய் தான் அதனை வயிற்றுக்குள் செலுத்துகிறது. இதன் போது உணவுக் குழாயில் உள்ள தசைகளின் சுருங்கி விரியும் தன்மை சீராக இருந்தால் மட்டுமே உங்களுடைய உணவுகள் உணவுக்குழாய் வழியாக வயிறை சென்றடைகிறது. உணவுக் குழாய் தசைகள் சுருங்கி விரிவதில் ஏதேனும் தடையோ அல்லது குறுக்கீடோ ஏற்பட்டால் அதனை இந்த பரிசோதனை மூலம் துல்லியமாக கண்டறியலாம்.
இந்த பரிசோதனையில் உங்களது நாசி வழியாக உணவு குழாய்க்குள் பிரத்யேக குழாய் செலுத்தப்படுகிறது. இவை வயிற்றுப் பகுதிக்கு சற்று முன் வரை சென்று காத்திருக்கும். இதன் போது மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிறிதளவு தண்ணீரை அருந்தசொல்வர்.
தண்ணீர் உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் செல்லும் போது உணவு குழாயில் தசை இயக்கம் மற்றும் அதில் உள்ள இடையூறுகள் ஆகியவை பிரத்யேகமாக செலுத்தப்பட்டிருக்கும் பரிசோதனை குழாயில் பொருத்தப்பட்டிருக்கும் கமெராக்கள் மூலம் துல்லியமாக அவதானிக்கப்படுகிறது. இதன் முடிவுகளை பொறுத்து உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது.
30 நிமிட கால அளவிற்குள் நிறைவடையும் இந்த பரிசோதனை முறை நோயாளிகளுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் உணவுக் குழாய் பாதிப்பினை துல்லியமாக அவதானித்து சீராக்க உதவுகிறது. இதனால் இந்த உணவுக் குழாய் மனோமெட்ரி பரிசோதனை நோயாளிகளுக்கு உரிய பலனை வழங்கி வருகிறது.
இத்தகைய பரிசோதனை மேற்கொள்வதற்கு முன் நோயாளிகள் எட்டு மணி நேரம் எதையும் சாப்பிடவோ குடிக்கவும் வேண்டாம் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும் இத்தகைய பரிசோதனை மேற்கொள்வதற்கும் முன் நோயாளிகளுக்கு நாசிப் பகுதியில் குறைந்த வீரியம் கொண்ட மயக்க மருந்து பயன்படுத்தப்படலாம்..
இந்த பரிசோதனையின் மூலம் உணவு குழாயில் உள்ள தசைகளில் ஏற்பட்டிருக்கும் இயக்க பாதிப்பு அச்சலாசியா எனப்படும் அரிய பாதிப்பு மற்றும் ஸ்க்லெரோடெர்மா எனும் அரிய பாதிப்பு ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து, சிகிச்சை அளித்து முழுமையான நிவாரணத்தை வழங்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,800SubscribersSubscribe

Latest Articles