27 C
Cañada
Wednesday, July 3, 2024
spot_img

ஒலிம்பிக் சம்பியனான எலைன் தொம்சன் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிலிருந்து விலகினார்

5 தட­வைகள் ஒலிம்பிக் தங்கப் பதக்­கங்­களை வென்ற, ஜமைக்காவின் குறுந்­தூர ஓட்ட நட்­சத்­தி­ர­மான எலைன் தொம்சன் ஹேரா, காயம் கார­ண­மாக பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளி­லி­ருந்து வில­கி­யுள்ளார்.ஏற்­கெ­னவே 200 மீற்றர் ஓட்­டத்­தி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்த அவர், தற்­போது 100 மீற்றர் போட்­டி­யி­லி­ருந்தும் வில­கி­யுள்ளார்.
ரியோ 2016, டோக்­கியோ 2020 ஒலிம்பிக் போட்­டி­களில் பெண்­களுக்­கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்­டத்தில் தங்­கப்பதக்கங்­ களை வென்­றவர் எலைன் தொம் சன் ஹேரா.அத்­துடன், டோக்­கியோ 2020 ஒலிம்பிக் 4 X100 மீற்றர் தொட­ரோட்டப் போட்­டி­யிலும் அவர் தங்கம் வென்றார். ரியோ 2016 ஒலிம்­பிக்கில் 4 X100 மீற்றர் தொட­ரோட்டப் போட்­டியில் அவர் வெள்­ளிப்­ப­தக்­கத்தை வென்­றிருந்தார். .
உலக வர­லாற்றின் மிகச் சிறந்த குறுந்­தூர ஓட்ட வீராங்­க­னை­களில் ஒருவரான அவர், தற்­போது உல­கி­லுள்­ள­வர்­களில் மிக வேக­மான வீராங்­க­னை­யாக விளங்­கு­கிறார்.பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளிலும் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்­டங்­களில் அவர் தங்கப்­ ப­தக்கம் வெல்வார் என்ற எதிர்­பார்ப்பு நில­வி­யது.
ஆனால், ஒலிம்பிக் 200 மீற்றர் போட்­டி­யி­லி­ருந்து தான் வில­கு­வ­தாக அவர் இவ்­வார முற்­ப­கு­தியில் அறி­வித்­தி­ருந்தார். எனினும், 100 மீற்றர் போட்­டியில் பங்­கு­பற்ற முடியும் என அவர் நம்­பிக்கை கொண்­டி­ருந்தார்.ஆனால், நேற்­று­முன்­தினம் (27 June) ஆரம்­ப­மான ஜமைக்காவின் ஒலிம்பிக் தகு­திகாண் போட்­டிகளில் எலைன் தொம்சன் பங்­கு­பற்­ற­வில்லை. இந்­நி­லையில், பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டிக­ளி­லி­ருந்து அவர் வாபஸ் பெற்­றுள்ளார்.இதனால், 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்­டி­களில் தொடர்ச்­சி­யாக 3 ஒலிம்பிக் போட்­டிகளில் தங்கப்பதக்­கத்தை வெல்லும் அவரின் கனவு கலைந்­துள்­ளது.
கடந்த 9ஆம் திகதி நடை­பெற்ற அமெ­ரிக்க க்ரோன் ப்றீ 100 மீற்றர் ஓட்­டப்­போட்­டி­யின்­போது எலைன் தொம்சன் காய­ம­டைந்தார். அதனால், 11.48 விநா­டி­களில் ஓடி ­மு­டித்து அவர் 9ஆவது இடத்­தையே பெற்றார்.2023 ஏப்ரல் மாதத்தின் பின்னர் 200 மீற்றர் ஓட்டப் போட்­டியில் அவர் பங்­கு­பற்­ற­வில்லை.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளி­லி­ருந்து தான் வாபஸ் பெற்­றுள்ள போதிலும் சக நாட்­ட­வர்­களுக்கு, பெரும்­பாலும் அரங்­குக்கு சென்று, உற்­சா­க­ம­ளிப்­ப­தற்கு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இம்முறை ஒலிம்பிக் போட்டிகளை தவறவிட்டாலும் தனது மெய்வல்லுநர் வாழ்க்கையை தான் தொடரவுள்ளதாகவும் எலைன் தொம்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,800SubscribersSubscribe

Latest Articles