21.9 C
Cañada
Friday, July 5, 2024
spot_img

இஸ்ரேல் சைப்பிரசை தளமாக பயன்படுத்தினால் சைப்பிரசை தாக்குவோம் – ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் எச்சரிக்கை

ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான தாக்குதலிற்கு சைப்பிரசினை இஸ்ரேல் தளமாக பயன்படுத்தினால் சைப்பிரசினை இலக்குவைப்போம் என ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையத் ஹசன் நஸ்ரெல்ல எச்சரித்துள்ளார்.லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொள்வதற்கு சைப்பிரசின் விமானநிலையங்களையும் தளங்களையும் பயன்படுத்துவதற்கு சைப்பிரஸ் அனுமதித்தால் சைப்பிரஸ் அரசாங்கம் அந்த யுத்தத்தின் ஒரு பகுதி என்பதே அர்த்தம் என ஹெஸ்புல்லா தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தனது அமைப்பு சைப்பிரசினை யுத்தத்தின் ஒரு பகுதியாகவே கையாளும் என அவர் தெரிவித்துள்ளார்.ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக பரந்துபட்ட தாக்குதலை மேற்கொள்வது குறித்து இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் உட்பட முக்கிய அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ள நிலையிலேயே ஹெஸ்புல்லா தலைவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
காசா போரில் ஹமாசிற்கு ஆதரவளிப்பதே ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நோக்கம் என குறிப்பிட்டுள்ள அவர் இஸ்ரேலிய படையினரை ஒரு பகுதியில் முடக்கிவைத்திருப்பதில் வெற்றியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.சைப்பிரசிற்கும் இஸ்ரேலிற்கும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,800SubscribersSubscribe

Latest Articles