21.9 C
Cañada
Friday, July 5, 2024
spot_img

தாய்லாந்தில் ஆசிய யானை ஈன்ற அரிய வகை இரட்டை யானைக் குட்டிகள்

மத்திய தாய்லாந்தில் உள்ள ஆசிய யானை ஒன்று அரிய வகை இரட்டை யானை குட்டிகளை ஈன்றுள்ளது. இது ஒரு அதிசயம் என அயுத்தயா யானைகள் சரணாலயத்தின் பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர். 36 வயதான ‘சாம்சூரி’ எனும் யானை எதிர்பார்க்காத வகையில் ஆண் யானை குட்டியை ஈன்றது. அப்போது, அயுத்தயா யானைகள் சரணாலயம் பராமரிப்பாளர்கள் பிரசவம் முடிந்துவிட்டதாக நினைத்தனர்.
பின்னர், ஈன்ற ஆண் யானை குட்டியை சுத்தம் செய்து அது நிற்பதற்கு உதவி செய்யும் போது, சாம்சூரி இரண்டாவது பெண் யானை குட்டியை ஈன்றுள்ளதாக பலத்த சத்தததை கேட்டு உணர்ந்தனர். இந்நிலையில், இரண்டாவது பிரசவம் பீதியில் ஆழ்த்தியதோடு, பெண் யானை குட்டி மீது தாய் யானையின் கால்கள் படாமல் பராமரிப்பாளர்கள் தடுக்க முற்பட்டபோது காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார்.இந்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
யானைப் பிறப்புகளில் ஒரு சதவீதத்தில் மட்டுமே இரட்டை யானை குட்டிகள் பிறக்கின்றன. மேலும் ஆண் மற்றும் பெண் யானை குட்டிகள் பிறப்பது மிகவும் அரிதான நிகழ்வு என சேவ் தி எலிஃபண்ட்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,800SubscribersSubscribe

Latest Articles