27 C
Cañada
Wednesday, July 3, 2024
spot_img

கனடாவில் நிசான் ரக வாகனங்களை பயன்படுத்துவோருக்கான எச்சரிக்கை

கனடாவில் நிசான் ரக வாகனங்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.நிசான் கனடா நிறுவனம் இந்த எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நிசான் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில வாகனங்களை மீள பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
சுமார் 48000 வாகனங்கள் இவ்வாறு மீள பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. வாகனத்தில் காணப்படும் ஏர் பேக்களில் (AirBags) காணப்படும் குறைபாடுகள் காரணமாக இவ்வாறு சில மாடல் வாகனங்கள் வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றும் வெப்ப நிலை காரணமாக இந்த ஏர் பேர்கள் சேதமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.டகாடா ஏர் பேக் (Takata airbags) வகைகளே இவ்வாறு சேதமடைந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் போர்ட் வாகன நிறுவனமும் ஏர் பேக் பிரச்சினை காரணமாக சுமார் 275000 வாகனங்களை மீளப் பெற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தது.அமெரிக்காவில் சுமார் 6.2 மில்லியன் வாகனங்கள் ஏர்பேக் பிரச்சனைகளுடன் வீதிகளில் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிசான் நிறுவனத்தின் 2002 QX4, 2002-2004 Pathfinder and 2002-2006 Sentra t ரக வாகனங்கள் இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாகனங்களை செலுத்தாது நிசான் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,800SubscribersSubscribe

Latest Articles