26.4 C
Cañada
Wednesday, July 3, 2024
spot_img

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள்!

அமெரிக்காவில் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கபட்டு இறுதிக்கட்டத்தை நொருங்கிய 62 வயதான நபரொருவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி, மருத்துவர்கள் குழுவொன்று வெற்றி பெற்றுள்ளனர்.அமெரிக்காவில், ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நபர், கடந்த 11 வருடங்களாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
குறித்த நபருக்கு மாசசூசெட்ஸ் Massachusetts மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்தனர்.ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து ஐந்து வருடங்களுக்குள்ளாகவே மீண்டும் அவருக்கு 2 சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது.அப்போது, மருத்துவர் டாட்சுவோ கவாய், தனது கடைசி முயற்சியாக நோயாளியான ரிக்ஸ்லாய்மென்னிடம், பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி பார்க்கலாம் என்று அனுமதி கேட்டுள்ளார்.நோயாளியும் தனது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருந்ததால், மருத்துவரின் ஆலோசனைக்கு ஒத்துக்கொண்டார். இதனால், மருத்துவர்கள் குழுவானது இவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி, அதில் வெற்றி பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய மருத்துவர் டாட்சுவோ கவாய்,
“பன்றியின் சிறுநீரகம் மனித சிறுநீரகத்தின் அளவை ஒத்ததாக இருக்கும். பன்றியின் இரத்த நாளங்களை நோயாளியின் இரத்த நாளங்களுடன் இணைக்கும் பொழுது, நாங்கள் எதிர்பார்த்தபடி உடனடியாக அது வேலை செய்ய ஆரம்பித்து, நோயாளியின் உடலிலிருந்து சிறுநீர் பிரிய ஆரம்பித்தது. இது எங்கள் ஆராய்ச்சி குழுவிற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,800SubscribersSubscribe

Latest Articles