Home செய்திகள் உள்ளூர் கனடாவில் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது

கனடாவில் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது

0

நீண்ட இடைவெளியின் பின்னர் கனடாவில் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.இறுதியாக கடந்த 2020ம் ஆண்டில் வட்டிவீதம் குறைக்கப்பட்டது.ஜீ7 நாடுகளில் முதன் முறையாக வட்டி வீதத்தை குறைந்த நாடாக கனடா திகழ்கின்றது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கனடிய மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பணவீக்கத்தை இரண்டு வீதமாக பேணுவதற்கான நகர்வுகள் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் காலங்களில் பணவீக்கத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
இதன்படி கனடாவின் வட்டி வீதம் 4.75 வீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கனடாவில் வட்டி வீதம் 5 வீதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.வட்டி வீத குறைப்பு தொடர்பில் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version