Home செய்திகள் உலகம் அனைத்து நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவேண்டும் – ஐநா நிபுணர்கள் வேண்டுகோள்

அனைத்து நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவேண்டும் – ஐநா நிபுணர்கள் வேண்டுகோள்

0

அனைத்து நாடுகளும் பாஸ்தீனத்தை அங்கீகரிக்கவேண்டும் என ஐக்கியநாடுகளின் நிபுணர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் 146 நாடுகளை பின்பற்றி ஏனைய நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கியநாடுகளின் நிபுணர்கள் காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கொண்டுவருவதற்காக நாடுகள் தங்கள் அரசியல் இராஜதந்திர வளங்களை பயன்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது என்பது பாலஸ்தீன மக்களின் உரிமைகளை அவர்களின் போராட்டங்களைசுதந்திரம்விடுதலைக்கான அவர்களின் துயரங்களை அங்கீகரிப்பதாகும் என ஐநா நிபுணர்கள்தெரிவித்துள்ளனர்.;
பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும் பாலஸ்தீனத்திலும் மத்தியகிழக்கிலும் நிரந்தர சமாதானத்தை உருவாக்குவதற்கான முன்நிபந்தனை இதுவென ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version